யாருடைய குடும்பத்தையும் நான் கெடுக்கல.. என்னை யாரும் ஏமாத்தல.. நான் ஏமாறல.. விளாசி தள்ளிய வனிதா!

யாருடைய குடும்பத்தையும் நான் கெடுக்கல.. என்னை யாரும் ஏமாத்தல.. நான் ஏமாறல.. விளாசி தள்ளிய வனிதா!
 நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் சர்ச்சையாகியுள்ள நிலையில், அதுகுறித்து தவறாக கமெண்ட் பதிவிடுபவர்களை விளாசி தள்ளியிருக்கிறார் நடிகை வனிதா. நடிகை வனிதா கடந்த சனிக்கிழமை பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வனிதாவை பீட்டர் திருமணம் செய்து கொண்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளர்.


வனிதா வீடியோ

இதனால் வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் பெரும் பேசு பொருளாகி இருக்கிறது. தன்னுடைய திருமணத்தில் உள்ள பிரச்சனை குறித்து பேசுபவர்களை சமூக வலைதளங்களில் வெளுத்து வாங்கி வருகிறார் வனிதா. அந்த வகையில் தனது திருமணம் குறித்து தவறாக பேசுபவர்களுக்கு பதில் தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வனிதா.

தவறாக புரிந்தவர்கள் தனது யூட்யூப் சேனலில் தனது மகள் ஜோவிகாவுடன் லைவில் பங்கேற்றால் நடிகை வனிதா. அப்போது அவர் பேசியதாவது, எனக்கு உண்மையா இருப்பவர்களுக்கும் தன்னை புரிந்து கொண்டவர்களுக்கும் நன்றி. நிறைய பேர் என்னுடைய திருமணத்தை தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு பதில் சொல்கிறேன்.


ஒரே நைட்டில்..

ஒரே நைட்டில் பலரின் வாழ்க்கையே மாறியிருக்கு. கணவர், வேலை, சொகுசான வாழ்க்கை என இருந்தவர்களுக்கு மறுநாள் காலையில் அவர் கணவர் இல்லாமல் போயிருக்கிறார். கஷ்டப்பட்டவர்களின் வாழ்க்கை ஒரே இரவில் மாறிப் போய் எல்லா பிரச்சனைகளில் இருந்தும் அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். வாழ்க்கை அப்படி மாறியிருக்கிறது.

குடும்பத்தை கெடுக்கவில்லை எனக்கு கடவுள் மீது மட்டும் தான் நம்பிக்கை உள்ளது. மத நம்பிக்கை எனக்கில்லை. அப்படிதான் நான் வளர்க்கப்பட்டேன். யாருடைய குடும்பத்தையும் நான் கெடுக்கவில்லை. இப்பவும் நான் என்னை பற்றி தவறா கமெண்ட் செய்பவர்களுக்குகாகதான் பேசுகிறேன். என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன் யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.


நானும் கம்ப்ளையன்ட் கொடுக்கலாம்

சரி நான் ஒரு தவறு செய்கிறேன், சட்டத்திற்கு புறம்பாக ஒரு வேலையை செய்கிறேன், ஒரு குற்றம் செய்கிறேன் என்றால் இன்விடேஷன் கொடுத்தா செய்வேன்? லைவில் மேக்கப் போட்டு பல வெளிப்படையாக செய்திருக்கிறேன். நான் 10 கம்ப்ளையன்ட் கொடுக்கலாம். என் பப்ளிசிட்டியை பெருக்கி கொள்ளலாம். இப்போ பாலிவுட் வரைக்கும் பாப்புலர் ஆயிட்டேன். அடுத்த இன்டர்நேஷனல் லெவலில் பாப்புலர் ஆகலாம்.


Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.