நிஜ வாழ்க்கையில் இந்த அளவுக்கு மோசமானவரா விஜய் ! விஜய்யின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிய நெப்போலியன்!

நிஜ வாழ்க்கையில் இந்த அளவுக்கு மோசமானவரா விஜய் ! விஜய்யின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிய நெப்போலியன்!
கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலரையும் நேரடியாக பேட்டி காணுவது இயலாத காரியமாக உள்ளது. இதனால், முன்னணி செய்தி நிறுவனங்கள் காணொளி கூடல் மூலம் பேட்டி எடுத்து வருகிறார்கள்.


அந்த வகையில், நடிகர் நெப்போலியனுடன் பிரபல ஊடகம் ஒன்று காணொளி மூலம் பேட்டி கண்டது. அதில், பல சுவாரஸ்யமாக விஷயங்களை பேசிய நெப்போலியன் போக்கிரி படத்தின் போது விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி முதன் முறையாக கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, போக்கிரி படத்தில் பிரபுதேவா-விற்காக தான் நடித்தேன். அந்த படத்தில் நடிக்கும் போது விஜய் கூட ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசுவதில்லை.

அதன் பிறகு வெளியான, அவருடைய படங்களையும் பார்ப்பதில்லை. தெலுங்கில், மகேஷ் பாபு பண்ணிய ரோலை விஜய் பண்ணியிருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜயிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசுவதில்லை, அவருடைய படங்களையும் பார்ப்பதில்லை என்று நடிகர் நெப்போலியன் கூறியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இந்த விவகாரம், கடந்த பல வருடங்களாக கிசுகிசுவாகவே சுற்றி வந்த நிலையில் இன்று இது உண்மையாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். போக்கிரி படம் வெளியான போதே இதுகுறித்த கிசுகிசுக்கள் பறந்தன.

அப்படி என்ன தான் விஜய்க்கும் நெப்போலியனுக்கும் பிரச்னை என்று கோடம்பாக்க வட்டாரத்தினரிடம் விசாரித்த போது அவர்கள் கூறிய காரணத்தை இங்கே பார்க்கலாம்.

நடிகர் நெப்போலியனின் நெருங்கிய நண்பர்கள் சிலர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள். நெப்போலியன் போக்கிரி படத்தில் நடிக்கும் நேரத்தில் அவரது நண்பர்கள் விஜய்யை சந்திக்க முடியுமா என கேட்க, விஜயை பாக்கணும் அவ்ளோ தானே.. வாங்க போலாம்.. பாக்குறது மட்டும் இல்ல, போட்டோவும் எடுத்துக்கலாம் என்று போக்கிரி படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

அதன் பிறகு நடந்த கூத்து தான் நெப்போலியனுக்கும், விஜய்க்கும் ஏற்பட்ட மனக்கசப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. நடிகர் நெப்போலியன் பெரிய நடிகர், பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், அன்றைய தினம் விஜய்யிடம் எந்த வித அனுமதியும் பெறாமல் அவருடைய நண்பர்களை சந்திக்க வைக்க வேண்டி விஜய்யின் கேரவேன் கதவை திறந்துள்ளார்.


கேரவேன் கதவருகே அமர்ந்திருந்த விஜய்யின் பாதுகாவலர் நெப்போலியனை தடுத்துள்ளார். சார் உங்களை பத்தி எதுவும் சொல்ல வில்லை. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார் கிட்ட கேட்டுட்டு வந்துடறேன் என்று கூறியுள்ளார். இதனால், அவமானப்பட்ட நெப்போலியன் அந்த பாதுகாவலருடன் வாக்கு வாதத்தில் ஈடுபடவே படப்பிடிப்பு தளம் கலவரமாகியுள்ளது.

வெளியில் சத்தம் வருவதை உணர்ந்த நடிகர் விஜய் கேரவேனுக்கு வெளியே வந்து நெப்போலியனிடம்.. சார்… உங்களுக்கு கொஞ்சமம் கூட மேனர்ஸ் இல்லையா..? என்று முகத்தில் அடித்தது போல கோபமாக பேசியுள்ளார்.

அதுவும், நடிகர் நெப்போலியனின் நண்பர்கள் முன்னிலையிலேயே திட்டியதால் நெப்போலியன் கடும் மன வருத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இது தான் நெப்போலியனுக்கு, விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாகி விட்டது என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.