வேதிகாவின் வேகமான லாக்டவுன் நடனம் ! வைரலாகும் வீடியோ

வேதிகாவின் வேகமான லாக்டவுன் நடனம் ! வைரலாகும் வீடியோ
ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான மதராஸி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதைத்தொடர்ந்து முனி, காளை, பரதேசி, காவியத்தலைவன் போன்ற படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அதிக ரசிகர்களை கவர்ந்தார். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய ரூலர் படத்தில் நடித்திருந்தார். 


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு ஊரடங்கை அறிவித்தது. வீட்டிலேயே மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்தாலும், வெளி உலகை காணாமல் பலர் அவதி படுகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என தங்கள் நேரத்தை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை வேதிகா, தனது ட்விட்டர் பக்கத்தில் நடனமாடி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீட்டின் மொட்டை மாடியில் வேதிகா ஆடிய டக்கி டக்கி நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடனமும் ஒருவகையான உடற்பயற்சி என்பதை உணர்த்துகிறார் வேதிகா. வேதிகா போல் நடனமாடினால் மனசோர்வு குறையும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். 


விக்டர் ஜெயராஜ் இயக்கி வரும் விநோதன் படத்தில் நடிகர் வருணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் வேதிகா. கன்னடத்தில் ஹோம் மினிஸ்டர் மற்றும் தெலுங்கில் ஜங்கிள் போன்ற படங்கள் வேதிகா கைவசம் உள்ளது. தமிழ் தவிர்த்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் வேதிகா. Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.